நாடு முழுவதும் டெங்குக்கு 36 பேர் பலி!!


நாட்டில், டெங்கு பாதிப்புக்கு, 36 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், 5,013 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பட்டியல் வெளியீடு:

நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வந்தது. தற்போது, 'டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பாதிப்புகள் குறித்து, அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது, யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து, டெங்கு பாதிப்புள்ள, 35 மாநில பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெங்கு பாதித்த மாநிலங்களில் முதல் நான்கு இடங்களை, தென் மாநிலங்கள் பெற்றுள்ளன.

36 பேர் பலி:

இதுகுறித்து, தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளா மாநிலத்தில், 12 ஆயிரத்து, 906 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்; 22 பேர் இறந்துள்ளனர்; தமிழகத்தில், 5,013 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்துள்ளார்; கர்நாடகாவில், 3,682 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் இறந்துள்ளனர்.ஆந்திராவில், 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; புதுச்சேரியில், 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில், 26 ஆயிரத்து, 64 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்; 36 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...