அமைச்சரின் உருவப் படத்தை தவறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 3 பேர் கைது


தமிழக அமைச்சரின் உருவப் படத்தை தவறாக சித்தரித்து வாட்ஸ் அப் குழுவில் பரப்பிய நபர் மற்றும் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் பகுதியில் உள்ள நபர்களால் தமிழக மீன்வளத் துறை
அமைச்சரின் உருவப் படம் தவறாக சித்தரிக்கப்பட்டு வாட்ஸ் அப் குழுவில் பரப்பப்பட்டதாக சோமங்கலம் போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் சோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர் அமைச்சரின் படத்தை ஆபாசமாக உருமாற்றி வாட்ஸ்அப் குழுவில் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து குணசேகரன் (25) மற்றும் குழு நிர்வாகிகள் இருவர் உள்பட 3 பேரை சோமங்கலம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














0000



NEWS LETTER
FOLLOW US
Copyright - Express Network Pvt Ltd - 2017

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...