ஒரே ஆண்டில் ரூ.57 கோடி லாபம் பார்த்த பெட்ரோல் பங்க்குகள்!!


பெட்ரோல் மற்றும் டீசல் விலை, 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்ட போது

, 1,500 பெட்ரோல் பங்க்குகள் ஒரே ஆண்டில், 57 கோடி ரூபாய் லாபம் பார்த்தது தற்போது அம்பலமாகி உள்ளது.

54,000 பெட்ரோல் பங்க்குகள்

நாடு முழுவதும், 54 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவற்றுக்கு, இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்றார் போல், 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன. ஜூன், 16ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பெட்ரோல் பங்க்குகள் மற்றும் டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு ஆண்டாக ஆய்வு

தினமும் விலை மாற்றம் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன், பெட்ரோல் பங்க் செயல்பாடுகளை பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வந்தது. மூன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் தலா, 500 பெட்ரோல் பங்க்குகள் என மொத்தம், 1,500 பெட்ரோல் பங்க்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பங்க்குகளில் விற்பனை அதிகம் இருந்ததும் இந்த ஆய்வுக்கு காரணம். இந்த பெட்ரோல் பங்க்குகள், 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றம் செய்யப்படுவதற்கு முன் தங்கள் சப்ளையை கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொண்டன. சர்வதேச சந்தை நிலவரத்தை நன்கு கண்காணித்து விலை குறைய போகிறது என தெரிய வந்தால், சப்ளையை குறைத்தும், விலை அதிகரிக்க போகிறது என தெரிந்தால், சப்ளையை அதிகரித்தும் வாங்கி வந்தன. இப்படி செயல்பட்டதன் மூம், ஒரே ஆண்டில் இந்த பங்க்குகளுக்கு, 57 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது தெரிய வந்தது. இந்த லாபம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், பெட்ரோல் பங்க்குகள் முறைகேடாக செயல்பட்டு அந்த லாப தொகையை பறித்து கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், '' சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இதுபோல் செயல்பட்டு இருக்கலாம்,'' என, தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் மேலும் விசாரித்து வருகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...