இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 % டெல்லியில் நடக்கிறது


டெல்லி இன்னும் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாறவில்லை. 2011-ம் ஆண்டு

572 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியிருந்தன. ஆனால், 2016-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 2,155. இதற்குக் காரணம், நிர்பயாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதான்.

2017-ம் ஆண்டு, முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 836 பாலியல் துன்புறுத்தல்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில், 48 மணி நேரத்தில் ஐந்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. 2017 ஜூன் 19 அன்று 24 வயது பெண், டெல்லி கார் பார்க்கிங்கில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். 2017 ஜூன் 20 அன்று டெல்லி புறநகர்ப் பகுதியில் 26 வயதான பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இப்படி, 2 நாள்களுக்குக் குறைந்தபட்சம் 5 வழக்குகள் பதிவாகிறது எனப் போலீஸ் அறிக்கையில் சொல்லப்படுகிறது.

2015-ம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணப் பிரிவு (NCR) தகவல்கள்படி, இந்தியாவில் மொத்தம் 3,430 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், டெல்லியில் மட்டும் 64 சதவிகிதம் அளவுக்குப் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

2013-ம் ஆண்டு டெல்லியில், பாலியல் துன்புறுத்தல்களின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. அதுவே, 2016-ம் ஆண்டு அறிக்கையில் 2,155 ஆக உயர்ந்துள்ளது. '

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு 161 ஹெல்ப் சென்டர்கள் டெல்லியில் அமைக்கப்பட்டன. இதில், பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் 70 சதவிகிதம் பேர் 8 மணி நேர ஷிப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல். தலைநகரத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கும்போது இந்தியாவில் தினம்தினம் நிர்பயாக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...