காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினர் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை காவல்துறை மானியக்கோரிக்கையின்போது நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு காத்திருக்கும் 2,500 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காவலர் குடியிருப்பில் அமைச்சுப்
பணியாளர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோரிக்கை தொடர்பான மனு காவல்துறைத் தலைமை இயக்குநர், உள்துறை செயலாளர், மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.