நடப்பாண்டு வருமான வரி இலக்கு ரூ.9.8 லட்சம் கோடி நிர்ணயம்!!!


மத்திய அரசின், கறுப்பு பண ஒழிப்பு மற்றும் பணமதிப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைக்குப்
பின், நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிகரிப்பு

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், நடப்பு நிதியாண்டான, 2017 - 18ல், வருமான வரி வசூல் இலக்கு, 9.8 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த வருமான வரி வசூல், 1.42 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இது, 2016 - 17 நிதியாண்டுக்கான முதல்காலாண்டை காட்டிலும், 14.5 சதவீதம் அதிகம். கார்ப்பரேட் வருமான வரி வசூல், 4.8 சதவீதமும், தனி நபர் வருமான வரி வசூல், 12.9 சதவீதமும் அதிகரித்து உள்ளது. முன்கூட்டியே வரி செலுத்தும் முறை, சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, 2016 - 17 நிதியாண்டை விட, 11.9 சதவீதம் அதிகம்.

14.5 சதவீதம் வசூல்

கார்ப்பரேட் நிறுவனங்களிடம்இருந்து, கடந்த நிதியாண்டை விட, 8.1 சதவீதம் அதிகமாகவும், தனி நபர்களிடமிருந்து, 40.3 சதவீதம் அதிகமாகவும் வரி வசூலாகியுள்ளது.வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டுக்கான இலக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, 9.8 லட்சம் கோடி இலக்கில், ஜூன் வரையிலான முதல் காலாண்டிலேயே, 14.5 சதவீத வரி வசூல் ஆகியுள்ளது.
தனி நபர்கள் ஏராளமானோர், வரி செலுத்தும் வளையத்திற்குள் வந்து உள்ளனர். பணமதிப்பு
மறு சீரமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் நல்ல பயன் அளித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...