அரசு பஸ் ஊழியர்களுக்கான, ஊதிய ஒப்பந்த பேச்சை நடத்த வலியுறுத்தி,
அனைத்து பணிமனைகளின் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 11 மாதங்களுக்கு முன் முடிந்தது. 13வது ஊதிய ஒப்பந்த பேச்சை, உடனே நடத்த வேண்டும்; பழைய நிலுவைகளை, உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மே, 14, 15, 16 ஆகிய நாட்களில், தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.
அப்போது, தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சில், 'போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்களை, உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர்கள் உறுதி அளித்தனர். ஆனால், அதற்கான நிதியை, தமிழக அரசு ஒதுக்கவில்லை; ஊதிய ஒப்பந்த பேச்சையும் துவக்கவில்லை. இதை எதிர்த்து, இன்று, 323 பணிமனைகளின் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.