இனியாவது கழிப்பிடத்தை பயன்படுத்துங்க... விசிலடித்து விழிப்புணர்வு! "தூய்மை இந்தியா' திட்டத்தில் நூதன பிரசாரம்!!!


தனிநபர் கழிப்பிடம் அமைப்பது குறித்தும், அதை பயன்படுத்துவது குறித்தும், சுழற்சி முறையில்

"விசில்' அடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் பிரசார பயணம், நேற்று துவங்கியது.
மத்திய, மாநில அரசு மானியம், 12 ஆயிரம் ரூபாயில், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் திட்டம், கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளில், 1.50 லட்சம் வீடுகளில் கழிப்பிட வசதியில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது அரசு மானியத்தில், தனிநபர் இல்ல கழிப்பிடம் அமைக்கும் திட்டம், ஒன்றியம் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டில், 84 ஆயிரம் வீடுகளில் கழிப்பிடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "தூய்மை பாரத இயக்கம்' அல்லது, தேசிய வேலை உறுதி திட்டம் என, இருவேறு திட்டங்களில் மானி யம் வழங்கப்படுகிறது. 265 ஊராட்சிகளில், 135 ஊராட்சிகள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத ஊராட்சிகள் என்று அறிவிக்கப்பட்டுள் ளன. மற்ற ஊராட்சிகளில், கழிப்பிடம் அமைக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இத்திட்டம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்து, அவர்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமுள்ள பகுதிகளுக்கு சென்று, "விசில்' அடித்து, மக்களை வரவழைத்து, கழிப்பிட பயன்பாட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம், தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாவட் டத்திலும், இரண்டு ஊராட்சிகள் தேர்வு செய்து, வாரம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் ஒன்றியத்தில், பெருமாநல்லூர் ஊராட்சி; குடிமங்கலத்தில், சோமா வாரப்பட்டி ஊராட்சியில், இத்திட்டம் நேற்று துவங்கியது.திருப்பூர் ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், தாமஸ் கிறிஸ்டோபர் ஆகியோர், பள்ளி மாணவ, மாணவியருக்கு, இதுகுறித்து விளக்கினர். ஊராட்சி செயலாளர், சுகாதார திட்ட ஊக்குவிப்பாளர்கள், பொடாரம் பாளையத்துக்கு அதிகாலையில் சென்று "விசில்' அடித்து வரவழைத்து, கழிப்பிடம் அமைக்கும் திட்டம் குறித்து விளக்கினர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ""மாவட்டத்தில், 135 ஊராட்சிகள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; மீதியுள்ள, 130 ஊராட்சிகளில், சுழற்சி முறையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுகாதார பணியாளர் மற்றும் ஊக்குவிப் பாளர் மூலமாக, அதிகாலையில் கிராமத்துக்கு சென்று, "விசில்' அடித்து மக்களை வரவழைத்து, மானியத்தில் கழிப்பிடம் அமைக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...