மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவது கட்டாயம்!!


மருத்துவ மாணவர்கள், கிராமப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதை
கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர, ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர்,அனில் விஜ், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஹரியானாவில், தற்போது, 1,700 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதத்தில் மருத்துவ சேவை உள்ளது.இதை, 1,000 பேருக்கு, ஒரு டாக்டர் என உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மருத்துவ மாணவர்கள், இரண்டு ஆண்டுகள் கிராமப் பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், சட்டம் கொண்டுவர உள்ளோம்.மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மருத்துவக் கல்லுாரி துவங்கப்படும்.அரசு மருத்துவ மனை களுக்கு, தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ சேவை அங்கீகாரவாரியத்தின் அங்கீகா ரத்தை பெறு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, பஞ்ச்குலாவில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் கிடைப்பதன் மூலம், மருத்துவ சேவை யின் தரம் உயரும். ஜஜ்ஜார் பகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. அம்பாலா வில், பிராந்திய மருத்துவமனை துவக்கப்பட உள்ளது.

மாநிலத்தின் பல்வேறு துவக்க சுகாதார மையங்க ளில், எம்.ஆர்.ஐ., மற்றும் சி.ஏ.டி., போன்ற பரி சோதனை வசதிகள் உள்ளன. அங்கு, வெறும், ஐந்து ரூபாய்க்கு, இந்த மருத்துவப் பரிசோதனை செய்யப் படுகிறது. இவ்வாறுமருத்துவ துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை:

இந்திய மருத்துவகவுன்சிலின் புள்ளி விபரங்களின் படி, நாடு முழுவதும், 9.29 லட்சம் பேர்,டாக்டர்களாக பதிவு செய்துஉள்ளனர்.அதில், 80 சதவீதம் பேர், அதாவது, 7.40 லட்சம் டாக்டர் கள் தான், எப்போதும் மருத்துவ சேவைக்கு தயாராக உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது. அதன்படி, 1,674 பேருக்கு, ஒரு டாக்டர் என்ற அளவிலேயே, மருத்துவ சேவை கிடைத்து வருகிறது.அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி, 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும்.

தற்போது ஒவ்வொரு ஆண்டும், தேசிய அள வில், 55 ஆயிரம் மருத்துவப் பட்டதாரிகளும், 25 ஆயிரம் முதுகலைபட்டதாரிகளும், படிப்பை முடித்து, டாக்டர் பணிக்கு வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...