பீகார் மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இக்கூட்டணி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. நிதிஷ்
குமார் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து குழு அமைக்கப்படும் என மாநில பா.ஜ., தலைவர் சுசில் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ., நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் , துணை முதல்வராக சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சரகள் நாளை ஜூலை 25 மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
*மருத்துவமனையில் கவர்னர் அனுமதி*
இந்நிலையில் பீகார்மாநில கவர்னர் கேசவ்நாத் திரிபாதி உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.