'ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் உணவுகளின் தரம் மிகவும் மோச மாக உள்ளது; மனிதர்கள் சாப்பிடக் கூடியதாக, அவை இல்லை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத் திய கணக்கு தணிக்கை அமைப்பு கூறியுள்ளது.
ரயில் உணவுகள் குறித்து, ரயில்வே அதிகாரி களுடன் இணைந்து, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு ஆய்வு செய்தது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் சோதனை நடத்தப்பட்டன.
இந்த சோதனை குறித்த, சி.ஏ.ஜி.,யின் அறிக்கை பார்லிமென்ட் டில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. அதில் கூறியுள்ளதாவது: உணவு
விஷயத்தில், ரயில்வே நிர்வாகம் மிகவும் மெத்த னமாக உள்ளது. உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் மனிதர்கள் சாப்பிடும் தரத்து டன் இல்லை. கெட்டுப் போன உணவுகளும், மறு சுழற்சி செய்யப்பட்ட உணவுகள் தாராளமாக விற்கப்படுகின்றன.
பயன்படுத்தும் காலம் முடிந்த, பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவுகளும், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், குளிர்பானங்கள் விற்கப்படு கின்றன. அங்கீகாரம் இல்லாதகுடிநீர் விற்கப்படுகிறது.
ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், ரயில்கள் மற்றும் ரயில்வே உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுத்தம், சுகாதாரம் இல்லை. கடந்த, 2005 முதல், மூன்று முறை, தன் உணவுக் கொள்கையை, ரயில்வே மாற்றி உள்ளது. இவ்வாறு அடிக்கடி மாற்றுவதால், அதை நாடு முழுவதும் செயல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற் கான வசதிகளும் செய்யப்படவில்லை.
ரயில்வே மண்டலங்கள் அளவிலான கொள்கை, கண்காணிப்பு போன்றவை இல்லை. ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. அங்கீகாரம் இல்லாதவர்கள்,
தரமற்ற உணவுப் பொருட்களைவிற்கின்றனர்.
ரயிலில் விநியோகிக்கப்படும் உணவுக்கான சமையல்கூடங்கள், ரயில்வே வளாகத்துக்குள் ளேயே இருக்க வேண்டும். ஆனால், 16 சமை யல் கூடங்கள் மட்டுமே, ரயில்வே வளாகத் துக்குள் உள்ளன; 115 சமையல் கூடங்கள், ரயில்வே வளாகத்துக்கு வெளியே அமைந் துள்ளன. அங்கு தயாரிக்கும் உணவு வகைகளின் தரத்தை எவரும் பரிசோதிப்ப தில்லை. ஏழு ரயில்வே மண்டலங் களில், 128 ரயில்களுக்கான உணவு, வெளியில் இருந்தே வருகிறது.
ரயில்வே உணவுகள் குறித்து பொதுமக்கள், தங்களுடைய குறைகளை கூறுவதற்கான அமைப்பு இருந்தும், அது செயல்படவில்லை. ரயில்வே உணவுகள் குறித்து, 2013ல், 5,851 புகார்களும், 2014ல், 6,307 புகார்களும், 2015ல், 6,155 புகார்களும், 2016ல், 4,084 புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை, ஆறு பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான புகார் களில், ஊழியர்களுக்கு எச்சரிக்கைகூட விடுக் கப்படுவதில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.