மாணவர்களும், பெற்றோர்களும் போராடினால் நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியும்
என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை பெற்றுத்தரக் கோரியும், அதுவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்துவதற்குஎதிர்ப்பு தெரிவித்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்றுஉண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது.
இந்த போராட் டத்தை தொடங்கிவைத்து முன் னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் பேசியதாவது:பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண் வாங்கினால் அரசு மருத்து வக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்ற கனவை நீட் தேர்வு தகர்த்துவிட்டது. தமிழ்நாட்டில் 98.5 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில்தான் படிக்கி றார்கள். வெறும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள்.
மருத்துவ படிப் புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை.நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் 2 மசோதாக்களை தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகமத்திய அரசுக்கு 31.1.2017 அன்று அனுப்பிவைத்தது. ஆனால், இன்னும் இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக் களின் நியமனத்துக்கு மறுநாளே மத்திய அரசின் ஒப்புதல் கிடைக் கிறது.
நீட் பிரச்சினை மாணவர்கள் சம்பந்தப்பட்ட