சைபர் பாதுகாப்பில் ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளை இந்தியா
முந்தியுள்ளது ஐ.நா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் செல்வம் பெருகும்போது, அங்கு சைபர் குற்றங்களும் பெருகும். ஆனால் சைபர் பாதுகாப்பு தானாகவே வந்துவிடாது. நாட்டின் சைபர் பாதுகாப்பை அதிகரிக்க அந்நாட்டின் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உலக நாடுகளின் சைபர் பாதுகாப்பு பற்றி ஐ.நா ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உலகளவில் சைபர் பாதுகாப்பில் இந்தியா 23ஆம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடான ஜெர்மனி இந்தியாவை விட ஒரு இடம் கீழே இறங்கி 24வது இடத்தை பெற்றுள்ளது. சீனா 32வது இடத்தை பிடித்துள்ளது.
உலகிலேயே சைபர் பாதுகாப்பு சிறந்து விளங்கும் நாடாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா மூன்றாவது இடத்தையும், ஓமன் நான்காவது இடத்தையும், எஸ்டோனியா ஐந்தாவது இடத்தையும், மொரிஷியஸ் ஆறாவது இடத்தையும், ஆஸ்திரேலியா ஏழாவது இடத்தையும், ஜியார்ஜியா மற்றும் பிரான்ஸ் எட்டாவது இடத்தையும், கனடா ஒன்பதாவது இடத்தையும், ரஷ்யா பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.