ஜல்லிக்கட்டுக்கு செய்தது போல், ‘நீட்’ தேர்வு தொடர்பாகவும் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்காலிக ஏற்பாடான இதன் செயலாக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று முன்தினம் டெல்லி வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் மத்திய அரசு சார்பில் சில ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதன்படி ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றியதுபோல், ‘நீட்’ தேர்வு தொடர்பாகவும் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம். இதன் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகம், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை செய்யும். எனினும், இது நிரந்தரச் சட்டம் இல்லை என்பதால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை எனக் கருதப்படுகிறது.
நடப்புக் கல்வியாண்டு அல்லது ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.