பொறியியல் கல்லூரி கல்வி கட்டணம் உயர்வு: : அமைச்சர் அன்பழகன் தகவல் அரசு பரிசீலனை!!"


''பொறியியல் கல்லுாரிகளில், கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அரசு பரிசீலனை
செய்து வருகிறது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ஜெயந்தி பத்மநாபன்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் தொகுதியில், பொறியியல் கல்லுாரி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் அன்பழகன்: அரசு பரிசீலனையில் இல்லை.
ஜெயந்தி பத்மநாபன்: என் தொகுதியில் உள்ள அரசு கல்லுாரியில், 3,500 மாணவ, மாணவியர், உயர் கல்வி கற்க விண்ணப்பித்தனர். ஆனால், 500 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க, பேரணாம்பட்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும்.அமைச்சர் அன்பழகன்: கல்லுாரிகளில், கூடுதல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தி.மு.க., - ரங்கநாதன்: தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், முதல் ஆண்டு, எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்? கல்விக் கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா; தரமான கல்வி நிலையங்கள், தரமற்ற கல்வி நிலையங்கள் என, எதன் அடிப்படையில் தரம் பிரிக்கிறீர்கள்; தரமற்ற கல்வி நிலையங்களை மூட, நடவடிக்கை எடுப்பீர்களா?அமைச்சர் அன்பழகன்: பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ல், 1.50 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர். ஒதுக்கப்பட்ட இடங்கள், 2.74 லட்சம். தரமான கல்வி நிலையம், தரமற்ற கல்வி நிலையம் என, அரசு தரம் பிரிப்பதில்லை.

மாணவர்கள் விரும்பும் கல்லுாரிகளில் சேர்கின்றனர்.கல்லுாரிகளில் உள்ள அடிப்படை வசதி, தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என, அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொறியியல் கல்லுாரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், 2012 - 13க்கு பின், கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.எனவே, கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என, அரசுக்கு, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு, இக்கல்லுாரிகளை, 'எக்ஸ், ஒய், இசட்' என, மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.

'எக்ஸ்' பிரிவில் உள்ள கல்லுாரிகளுக்கு, 1.58 லட்சம் ரூபாய்; 'ஒய்' பிரிவு கல்லுாரிகளுக்கு, 1.50 லட்சம் ரூபாய்; 'இசட்' பிரிவு கல்லுாரிகளுக்கு, 1.47 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது.அதன்படி, தற்போது அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, கல்விக் கட்டணத்தை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்; மேலாண்மை இடத்திற்கு, 75 ஆயிரம் ரூபாயில் இருந்து, 85 ஆயிரம் ரூபாய் என, 10 ஆயிரம் ரூபாய் உயர்த்த, தனியார் கல்லுாரி கட்டண கமிட்டி, அரசுக்கு பரிந்துரை வந்துள்ளது. இது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...