அரசு நிலத்தை 'ஸ்வாகா' செய்த சத்தீஸ்கர் அமைச்சர் மனைவி


ராய்பூர், அரசுக்கு, விவசாயி ஒருவர் தானமாக அளித்த நிலத்தை,
சத்தீஸ்கர் அமைச்சரின் மனைவி, தன் பெயருக்கு மாற்றியதுடன், அங்கு, அரசின்
அனுமதியுடன், சுற்றுலா விடுதி கட்டி வருகிறார்.சத்தீஸ்கரில் அமைந்து உள்ள, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசில், வேளாண்மை, நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார், பிரிஜ்மோகன் அகர்வால். இவரது மனைவி, சரிதா அகர்வால், சுற்றுலா தலமான சிர்புரில், 4.12 ஹெக்டேர் நிலத்தில், சுற்றுலா விடுதி கட்டி வருகிறார்.கடந்த, 1994ல், விஷ்ணு ராம் சாகு என்ற விவசாயி, 4.12 ஹெக்டேர் நிலத்தை, அரசுக்கு தானமாக அளித்ததாக, அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார்நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்ட இந்த நிலம், பின், வனத்துறைக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், விஷ்ணுராம் சாகுவிடம் இருந்து, சரிதா அகர்வால், இந்த நிலத்தை வாங்கியதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது, அரசு அனுமதியுடன், அங்கு சுற்றுலா விடுதியும் கட்டப்பட்டு வருகிறது.இதற்கிடையில், அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அமைச்சரின் மனைவி, தன் பெயருக்கு மாற்றியது தொடர்பாக, புகார்கள் எழுந்தன.
கடிதம்
பிரதமர் அலுவலகத் துக்கும், இது தொடர்பான புகார் அனுப்பப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய, தலைமைச் செயலருக்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.சத்தீஸ்கர் நீர்வளத்துறை சார்பில், தலைமைச் செயலருக்கு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுஉள்ளதாவது:
விஷ்ணு ராம் சாகு என்பவர், தன் நிலத்தை அரசுக்கு தானமாக அளித்தது தொடர்பான எந்த ஆவணங்களும், துறையில் பராமரிக்கப்படவில்லை. விஷ்ணு ராம் சாகு, சரிதா அகர்வாலுக்கு நிலத்தை விற்றுள்ளதாக, சார் - பதிவாளர் துறை ஆவணம் கூறுகிறது. சரிதா அகர்வால் மீது எந்த குற்றமும் இல்லை என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...