போலி சான்றிதழ் கொடுத்திருந்தால் பதவியை பறிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி


போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால்
அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிர அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மகாராஷ்டிர அரசின் உத்தரவு செல்லாது என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மும்பை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் மும்பை கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...