தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்
நடக்க உள்ளது. இந்நிலையில் ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் போலீசாரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானதால் தலைமைச்செயலகம், மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துபவர்கள் தலைமை செயலகம் மற்றும் சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தலைமை செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் போன்ற பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது