இங்கி., மாணவியால் மின்சாரம் பெற்ற உ.பி., கிராமம்!!


இங்கிலாந்து மாணவியின் முயற்சியால்,
மின்சார வசதி பெற்றுள்ளது.
உ.பி.,யில் கிராமம் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட வீடுகள்

சாத்தியம்:

உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் சர்வாந்திரா கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இந்த கிராமம் மின்சார வசதி பெறாமல் இருந்தது. இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியில் பி.எச்டி படிக்கும் கிளெமென்டின் சம்பான் என்பவர் தனது சமூக தொண்டு நிறுவனம் சார்பில் 8 கிலோவாட் சூரிய சக்தி மின்சக்தி மூலம் 100 வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதன் மூலம் அங்கு வசிக்கும் 1000 பேர், மின் விளக்குகள், மின் விசிறி போன் சார்ஜ் செய்தல் போன்றவை சாத்தியமாகியுள்ளது.

பெருமை:

இது தொடர்பாக சம்போன் கூறுகையில், இந்த மின்சாரம் மூலம் தங்களது குழந்தைகள் படிப்பதை பார்த்த மக்களின் மகிழ்ச்சியை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. பள்ளியில் கம்ப்யூட்டர் சென்டர் திறக்க வேண்டும். அதில் தங்களது குழந்தைகளும் கம்ப்யூட்டர்களை கற்று கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.சூரிய மின்சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம், அப்பகுதி விவசாயிகள் மோட்டார் பம்ப்கள் பயன்படுத்துகின்றனர். இதற்காக ஆகும் செலவு, டீசல் மூலம் இயங்கும் பம்புகளை விட குறைவு. கடந்த வருடம் போதிய மழை இல்லாததால், மின்சாரம் மூலம் இயங்கும் பம்புகளின் தேவை இங்கு அதிகரித்துள்ளது. விவசாயத்திற்காக, எங்களது அமைப்பு மூலம் மின்சாரம் பெற மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் டீசல் விலை அதிகரித்து வருவதால், டீசல் மூலம் இயங்கும் பம்புகளுக்கு மாற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...