விண்ணப்பம் குறைவாக வந்துள்ளதால், ஆன்லைன் பதிவுக்கான கால அவகாசத்தை
, நான்காவது முறையாக, அண்ணாமலை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2017 - 18ம் கல்வி ஆண்டு, மாணவர் சேர்க்கைக்காக, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மூன்றாவது முறையாக கால அவகாசம்நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதால், நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அனைத்து பாட பிரிவுகளிலும், இசைப் பிரிவிலும் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வரும் ஆகஸ்ட், 4ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழக பதிவாளர்ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.