மாணவர்களுக்கு டெங்கு அபாயம் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை 〰〰〰〰〰〰〰〰〰〰〰



’டெங்கு பாதித்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைத்தால், மற்றவர்களுக்கு
நோய் பரவும் அபாயம் ஏற்படும்’ என்று, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள மாணவ, மாணவியருக்கு, ரத்த பரிசோதனை செய்து, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானால், குணமாகும் வரை அவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, வைரஸ் மற்றும் டெங்கு போன்ற காய்ச்சலால் பாதித்தாலும், விடுமுறை அளிக்காமல், பள்ளிக்கு வர நிர்ப்பந்திக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், புகழேந்தி கூறியதாவது:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, மாணவ, மாணவியர் குணமடையும் வரை அவர்களுக்கு விடுமுறை வழங்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், சில தனியார் பள்ளிகள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களை, கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைப்பதால், மற்ற மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களை, கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்கும் தனியார் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நிலவேம்பு கஷாயம் வினியோகம் புதுக்கோட்டை மாவட்டத்தில், டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களை தடுக்க, பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட, சித்த மருத்துவ அலுவலர், மோகன் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட, 33 இடங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இங்கு, தினமும் நில வேம்பு கஷாயம் தயாரித்து, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கஷாயத்தை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் வராமலும், குணப்படுத்தவும், நிலவேம்பு கஷாயம் உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...