வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவித்த
குற்றச்சாட்டில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து அவர் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளார்.
இவருக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இது இந்தியாவுக்கு இடையூறாகத்தான் அமையும் என சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர். நவாஸ் ஷெரீப்பை பொறுத்தவரை உலக அளவில் அனைவரையும் அறிந்து வைத்திருப்பவர் . அனைத்து தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தவர். இவர் பொறுப்பில்இருந்து விலகும் போதுஅங்கு ஸ்திரத்தன்மைக்கு பங்கம் ஏற்படும். ராணுவம் கை ஓங்கும்,
தேர்ந்தெடுக்ககப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லையென்றால், ராணுவ அதிகாரம் அதிகரிக்கும். இவர்கள் துணையுடன் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்றும் கூறப்படுகிறது