சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., எம்.ஏ., உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 14- ஆம் தேதி வரை தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2017- 18- ஆம் ஆண்டுக்கான கீழ்கண்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் பதிவு செய்வது கடந்த மே 8- ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க ஜூன் 30- ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி ஜூலை 14- ஆம் தேதி மாலை 5.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ள படிப்புகள் விவரம்: எம்.ஏ., எம்.காம், எம்.லைப்ரரி சயன்ஸ், எம்.எஸ்சி., எம்.எஸ்.டபிள்யு, எம்.ஹெச்.எஸ்.எஸ்., எம்.ஆர்.எஸ்., எம்.எஸ்சி., மரைன் சயன்ஸ், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுகலை பட்ட வகுப்புகள், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், எம்.எஸ்சி., நர்சிங், கள் மற்றும் அனைத்து இசைத் துறை படிப்புகள்.