பி.எட். மாணவர் சேர்க்கை: 6,200 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு


இரண்டாண்டு பி.எட். (இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பு) மாணவர் சேர்க்கைக்கு
6,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 3-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1,777 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்த உள்ளது. கூடுதலாக 2,200 பேர் விண்ணப்பம்: இதற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூலை 3) முடிவடைந்த நிலையில் 6,200 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 2,200 பேர் கூடுதலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 4,025 பேர் மட்டுமே விண்ணப்த்தைச் சமர்ப்பித்திருந்தனர். ஜூலை 3 -ஆவது வாரத்தில் கலந்தாய்வு: பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆவது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...