அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்குத் தடை!!

புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 5 மாவட்டங்களின் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தடை விதித்திருந்த நிலையில் இன்று ஜூலை 5ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம் அந்த தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு விதிகளை மீறி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாகக் கூறி, அதை எதிர்த்து, புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, மேற்கண்ட 5 மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூன் 28ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் செல்வம் மற்றும் ஆதிநாதன் அமர்வு, அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முறையான நடைமுறைகளின் கீழ் நியமிக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. அதனால், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும், விதிமுறைகள்படி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்தது தொடர்பாக உரிய ஆவணங்களை தமிழக அரசின் கூடுதல் செயலாளர் வருகிற ஜூலை 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.,

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...