ரேஷன் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!!

சட்டசபையில் ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை(இன்று),நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை முழுமையாக வினியோகம் செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொண்டுவரப்பட்டது.


அப்போது திமுக உறுப்பினர் செங்குட்டுவன், ‘கடந்த சில மாதங்களாக ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது மக்கள் விரும்பாத பொருட்களை வாங்கும்படி ரே‌ஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்துகிறார்கள். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே, அவரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது, ‘ரே‌ஷன் கடையில் 20 கிலோ இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படுகிறது.மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை தடையின்றி வழங்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எந்தவித தடையும் இல்லை. மண்ணெண்ணை தேவையானவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 10 கிலோ கோதுமையும், மற்ற இடங்களில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. எனவே ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் இதுவரை எந்த தடங்கலும் இல்லை. ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது மக்கள் விரும்பாத சில பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்கும்படி ஊழியர்கள் கூறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...