ஐஐடி நுழைவு தேர்தவில் இந்தி மொழி வினாத்தாளில் ஏற்பட்ட பிழைக்கு
சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பிழை இல்லாவிட்டாலும், எழுதியவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. 2 வினாக்களுக்கு 7 சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடி.,க்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐஐடி நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை மற்ற கோர்ட்கள் விசாரிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஜூலை 10 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது