*காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை*


ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி,
20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.*
*சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை: அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.* *மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்.*
*ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.*
*போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர்.*
*ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.*
*அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை.* *எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும்.*
*இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...