ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி? ராஜேஷ் லக்கானி தகவல்!!!


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-
ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவுள்ளனர். எம்.பி.க்களுக்கு பச்சை வண்ணத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு பிங்க் நிறத்திலும் வாக்குச்சீட்டு தரப்படும். ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கும் சட்டசபை செயலாளர் கடிதம் எழுதுவார்.

நிர்ணயிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் ஓட்டுபோட வேண்டும் என்றால் அதுபற்றி 6-ந் தேதிக்குள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு 13-ந் தேதிக்குள் அதை தேர்தல் கமிஷன் உறுதி செய்யும்.

கூடுதலாக 2 வாக்குப் பெட்டிகளை 12-ந் தேதி அலுவலர்கள் டெல்லிக்கு சென்று வாங்கி வருவார்கள். 17-ந் தேதி வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு பூத் சிலிப்பை தேர்தல் கமிஷன் அளிக்கும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...