சூரிய ஓளி மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவுக்கு உலக வங்கி
பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சூரிய ஓளி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்தியா 2030ம் வருடத்திற்குள், தனது நாட்டு மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சர்வதேச முயற்சியில் முன்னிலையில் உள்ளது. வளர்ச்சி பாதையில், சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தி, பருவநிலை மாற்றத்திலிருந்து பூமியை காப்பதற்கான முயற்சியில் தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
இந்தியாவில், நிலக்கரிக்கு மாற்றாக சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை, கடந்த 2009ம் ஆண்டிலிருந்ததை விட தற்போது, மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இது 2040க்குள் இன்னும் 66 சதவீதம் குறையும்.
வருடத்தில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைப்பதால், இந்தியாவில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான உகந்த சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இதனால், மின்சாரத்திற்கான விலையும் குறையும். ராஜஸ்தானில் பாலைவனத்தில் உற்பத்தி செய்யப்பட சூரிய ஒளி மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.44 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வரும் 2022க்குள் சூரிய ஓளி மூலம் 160 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் லட்சகணக்கான மக்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதுடன், குழந்தைகள் இரவில் படிக்கவும், டிவி பார்க்கவும், பிரிட்ஜ்களை பயன்படுத்தவும் மக்களுக்கு தேவையான அளவு மின்சாரம் கிடைக்கும்
இந்தியாவில் சூரிய ஒளி மின்திட்டத்தில் முதலீடு செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது