ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில், மசூதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
*சர்ச்சை:*
ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய சான்றிதழ் இடைநிலை கல்வி வாரியத்தின் ஆறாம் வகுப்பு பாட
புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்துபவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இதில், ரயில், கார், பஸ், விமானம் உள்ளிட்டவற்றுடன், மசூதி படமும் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், சமூகவலை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.சி.எஸ்.இ., தலைவர் ஜெர்ரி கூறியதாவது: இந்த பாட புத்தகத்தை எங்கள் வாரியம் வெளியிடவில்லை. தனியார் வெளியீட்டு நிறுவனமே இதற்கு காரணம். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
*மன்னிப்பு:*
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தின் உரிமையாளர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ''ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இடம் பெற்ற அந்த படம் உடனடியாக நீக்கப்படும். நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம்; இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றார்.