நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சிலருக்கு வினாத்தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 22 மையங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு நடந்தது. இதில் 7,367 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். ஓரிரு மையங்களில் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதால் தேர்வு எழுத
வந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். நெல்லையில் ஒரு பள்ளியில் தமிழ் பாடத்திற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுகள் நடந்தன.
ஆனால் அங்கு வரலாறு முதுகலை படித்தவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழ் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு வரலாறு தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வேண்டும் என அவர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் சீட் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பினார். இம்மையத்தில் தமிழுக்குரிய வினாத்தாள்கள் மட்டுமே உள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்று முறையிட அங்கிருந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனால் வரலாறு தேர்வெழுத வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதே பிரச்னை காரணமாக சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டார். வணிகவியல் தேர்வு எழுத வந்த அவருக்கு ஆங்கில தேர்வுக்குரிய வினாத்தாள் வழங்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘போட்டித் தேர்வு எழுத வந்தவர்களுக்கு விண்ணப்பத்தில் அவர்கள் அளித்த பார்கோடு எண் அடிப்படையிலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக 01 என்றால் தமிழ்பாடமும், 02 என்றால் ஆங்கில பாடமும், 05 என்றால் வேதியியல் பாடமும், 11 என்றால் வரலாறு பாடமும் பார்கோடு எண் அடிப்படையில் மையங்கள் ஒதுக்கப்படும்.
வரலாற்று பாடத்திற்கு 11 என குறிப்பிடுவதற்கு பதிலாக 01 என தவறாக விண்ணப்பித்தால் அவர்களுக்கு தமிழுக்குரிய மையங்களே ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்ததில் அவர்கள் செய்த தவறுகள் காரணமாகவே ஓரிருவர் மாற்று பாடத்திற்குரிய வினாத்தாள்களை பெற்றுள்ளனர். பார்கோடு சரியாக குறிப்பிட்டிருந்தால் அவர்கள் முறையான மையங்களுக்கு சென்றிருப்பர்.’’ என்றனர்.