உலகின் முன்னணி மொபைல் தயாரிக்கும் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பாதுகாப்பான மொபைல்களை வெளியிட்டு வருகிறது. அதனால் பல்வேறு பயனர்கள் அதனைப் பயன்படுத்தி வந்தாலும் ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தக் கூடிய சில வசதிகளை அவர்களால் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் பெரும்பாலான பயனர்களிடம் உள்ளது.
அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய மாடலான ஐ-போன் 7-ல் செயல்படும் புதிய கருவி ஒன்றினை PhotoFast என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி ஐ-போன் பயன்படுத்தும் பயனர்கள் தங்களின் அழைப்புகளைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியானது உள்ளே பயன்படுத்தும் பல்வேறு அப்ளிகேஷன்களால் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த புதிய கருவி என்ற கேள்வி பயனர்களிடம் எழுந்தது. அதற்கான பதிலையும் PhotoFast நிறுவனம் அந்த கருவியின் செயல்பாடு குறித்து வெளியிட்ட வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளது. சாதாரணமாகப் பயனர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் மூலம் நமது மொபைல்களில் வரும் அழைப்புகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால் சமூகவலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்கைப் மற்றும் வைபர் போன்றவற்றில் இருக்கும் அழைப்புகளைப் பதிவு செய்துகொள்ள இந்த கருவி பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மொபைல்களில் தேவையான தகவல்களை பேக்அப் எடுத்துக்கொள்ளவும் இந்த கருவி பயன்படுவதால் இந்த கருவியை ஒரு கூடுதல் சேமிப்பு பகுதியாகவும் பயன்படுத்தலாம். இந்த கருவியில் சேமிப்பிற்காக மெமரி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
