கல்வியை கடைச்சரக்காக்கிய பாரதியார் பல்கலை; துணைவேந்தரை முற்றுகையிட்ட கல்லூரி நிர்வாகிகள்


தொலைதுார கல்வி மையம் என்ற பெயரில்,
கோவை பாரதியார் பல்கலை அனுமதியுடன் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் கல்லுாரிகளின் நிர்வாகிகள், நேற்று துணைவேந்தரை முற்றுகையிட்டனர்.

 கல்வியை,கடைச்சரக்காக்கிய,பாரதியார்,பல்கலை,துணைவேந்தர்

கல்லுாரி நிர்வாகிகளின் புகார்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் திண றிய துணைவேந்தர், சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி, 15 நாளில் உரிய முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 250க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்லுாரிகள், பல ஏக்கரில் பிரமாண்ட கட்டடம், தகுதியான ஆசிரியர்கள் உடன் செயல்படுகின்றன.

இக்கல்லுாரிகளில், புதிதாக ஒரு பட்டப்படிப்பு துவங்குவதற்கு, பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட பல்கலை கழகத்தில் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

ஆனால், சமீபகாலமாக, சென்டர் பார் பார்ட்டிசி பேட்டரி அண்ட் ஆன்லைன் புரோகிராம் - சி.பி.ஓ.பி., சென்டர் பார் கொலாபுரேசன் ஆப் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இன்ஸ்டிடியூஷன்ஸ்.
சி.சி.ஐ.ஐ., சென்டர் பார் பார்ட்டிசிபேட்டரி புரோகிராம்ஸ் - சி.பி.பி., என, பல்வேறு பெயர் களில், தொலைதுாரக் கல்வி மையங்கள் துவக் கப்பட்டு, கலை, அறிவியல் கல்லுாரி களில், மூன்றாண்டு பட்ட வகுப்புகள் நடத்தப்படு கின்றன;

இந்த மையங்களில் கற்போருக்கு, பல்கலை சான்றிதழும் வழங்கப்படுகிறது. இது, பல்கலை மானியக்குழுவின் வரையறைகளை, அப்பட்ட மாக மீறுவதாகும். இந்த சான்றிதழுக்கு எந்த மதிப்புமில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தான், இந்த விதிமீறலில் முதலிடம் வகிக்கிறது. இப்பல்கலையின் கீழ், 110 தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகள் இருக்கும் நிலையில், இந்த பல்கலையின் எல்லையைத் தாண்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலும், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட

வெளி மாநிலங்களிலும், தொலை துாரக் கல்வி மையங்கள் நடத்த, முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மையங்கள், 2007ல் துவக்கபட்ட போதே, தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லுாரிகள் சங்கம், இவற்றை எதிர்த்தது. அப்போதெல்லாம் பல்கலை எல்லை யைத் தாண்டி, இந்த மையங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; மையங்களும் வரம்பு மீறி செயல்படவில்லை.இரு ஆண்டுகளுக்கு முன், இப்பல்கலையின் துணை வேந்தராக ஜேம்ஸ் பிச்சை இருந்த போது தான், இந்த விதிமீறல் அளவு கடந்தது.

அதன்பின், சுயநிதிகல்லுாரிகள் சங்கம், இதை கடுமையாக எதிர்த்தது. இவற்றை மூட வேண்டும் என, மனுவும் கொடுத்தனர். அவர் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை; அவருக்குப் பின் துணைவேந்த ராக கணபதி பதவியேற்ற பின், கூடுதல் மையங் களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலுமாக மொத்தம், 320க்கும் மேற்பட்ட தொலை துார கல்வி மையங்கள், பாரதியார் பல்கலை பெயரில் செயல்படுகின்றன.

இவற்றில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டு மின்றி, மருத்துவ கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய, 'பாரா மெடிக்கல்' பட்டப் படிப்புகளையும் வழங்குவதாக, இந்த மையங்களால், விளம்பரம் தரப்படுகிறது.

பெட்டிக்கடை அளவிலுள்ள கட்டடங்களில் எல்லாம், தொலை துார கல்வி மையம் துவக்கப் பட்டு, உயர் கல்வி, கடைச்சரக்கு போல மாறியுள் ளது. கடந்த ஆண்டில், சுய நிதி கல்லுாரிகள் சங்கம், இதை கடுமையாக எதிர்த்த போது, 'எல்லை தாண்டி யுள்ள மையங்கள், படிப்படியாக மூடப்படும்' என, கூறப்பட்டது. ஆனால், எதுவும் மூடப்படவில்லை; மாறாக, இந்த ஆண்டிலும் கூட, நிறைய மையங் களுக்கு விதிகளை மீறி,அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த மையங்களால், 'சனி, ஞாயிறு மட்டுமே வகுப்புக்கு வந்து பட்டம் பெறலாம்' என்ற ரீதியில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. பாரதியார் பல்கலை அங்கீகாரம் என்பதால், இதை நம்பி, ஏராளமான மாணவர்கள் ஏமாறுகின்றனர்.

இது தொடர்பாக, சுயநிதி கல்லுாரி சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட், வழக்கு விபரத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தியது; அதுவும் செய்யப்படுவதில்லை.

இந்த சங்கத்தின் புகாரின்படி, தொலைதுார கல்வி மையங்களை நடத்துவதற்கு, பல்கலை மானியக் குழுவும் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவாலும், இந்த மையங்களை மூட உத்தர விட்டார். ஆனால்,

இன்று வரை மையங்களால் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.இதனால், கொந்தளித்த சுயநிதி கல்லுாரிகளின் நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர், பாரதியார் பல்கலையில் நேற்று மாலையில் ஒன்று கூடினர்.

சங்கத்தின் தலைவர் கலீல், செயலர் அஜித் லால் மோகன் மற்றும் நிர்வாகிகள் அனை வரும், துணைவேந்தர் கணபதி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...