அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்!!




அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களே அதிகம்
. 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் அமெரிக்காவில் வீடுகள் வாங்குவதில் இந்தியர்கள், 7.8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்பவர்களில் இந்தியர்கள் 5 வது இடத்தில் உள்ளனர். 31.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கனடா, பிரிட்டன், மெக்சிகன் மற்றும் இந்தியர்களே அமெரிக்காவில் அதிக சொத்துக்களை வாங்குபவர்களாக உள்ளன.
2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் மாதம் வரை 6.1 பில்லியன் டாலர்களை இந்தியர்கள் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்க செலவிட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்கள் வாங்கும் சொத்துக்கள் மற்றும் அதற்காக முதலீடு செய்யப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதிக சொத்துக்களை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவிலேயே வசிப்பவர்களாகவும், கனடா மற்றும் பிரிட்டன் நாட்டினர் அமெரிக்காவில் வசிக்காதவர்களாகவும் உள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...