jacto- jio போராட்டம் புதியதாக கடை திறந்துள்ள அரசிற்கு வைக்கும் தேர்வே ...!!

🔴🛑ஜாக்டோ - ஜியோ போராட்டம் 🛑🔴

தமிழகத்தில் அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் போராட்டங்கள் எப்படி முடியலாம் ஓர் கணிப்பு ..

அரசு ஊழியர் சங்கங்களில் அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் சில சங்கங்களை தவிர்த்து பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்களும் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து ஜாக்டோ என்ற பெயரிலான
கூட்டியக்கமும் போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றன ..

இதில் அரசின் சார்போடு செயல்படும் சங்கங்களில் அரசு அலுவலர் ஒன்றியம் போராட்ட களத்திற்கு இன்னும் வரவில்லை ..

இந்நிலையில் jacto மற்றும் geo வில் சம பலத்துடன் கலத்தில் நிற்கின்றன ..

jacto வை பொறுத்தவரை அதிக அளவில் தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் பங்குபெறுவர் .

அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் .

ஆக இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் சார்பாக அதிக பங்களிப்பை செலுத்துவது இடைநிலை ஆசிரயர்களே ..

இடைநிலை ஆசிரியர்களுக்கு இருப்பது போல geo வில் அதிக ஊதிய முரண்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை ..

இருப்பினும் cps எல்லோருக்கும் பொதுவானது

கடந்தகால jacto -jio போராட்டங்கள் நமக்கு உணர்த்துவது பொது கோரிக்கை வெல்லும் .
தனி கோரிக்கை வெல்லவே வெல்லாது ..

இருப்பினும் தற்போது இப்போராட்டத்தை தமிழக தலைமை செயலக சங்கமும் அரசூழியர் சங்கமும் முன்னெடுத்து ஆசிரியர் சங்கங்கள் துணை நிற்பதால் பொது கோரிக்கை வெல்லலாம் ..

கோரிக்கைகள்
〰〰〰〰〰
1. கடந்த ஊதியக் குழுவின் முரண்பாடுகள் களையப்பட்டு புதிய ஊதியக்குழு நடைமுறை படுத்துதல் .

2. அதுவரை 20% இடைக்கால நிவாரணம் வழங்குதல்

3. cps ஒழித்து பழைய ஊதியம் வழங்குதல் .

இவை அனைத்தும் நிதி சார்ந்த கோரிக்கைகள்

 இதில் அரசு 2 வது கோரிக்கையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் போராட்டம் கைவிடப்படலாம் ..

இந்நிலை அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காதென நம்பலாம் ..

ஜெ. மறைவிற்கு பிந்தைய எடப்பாடி அரசு முடிவை எடுக்குமா ?? இல்லையேல் முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் ..

ஊதிய மற்றும் ஓய்வூதிய விசயங்களுக்கு அரசு குழுக்களை நோக்கி கைகாட்டவே முயலும் ..அரசு தர விருப்பம் இல்லாமல் அமைக்கப்படுவதே குழுக்கள் இதில் நீட்டிப்பும் குழு செயல்படாத நிலையும் தனி ..

அரசு நிறைய கடனில் இருப்பதாக காரணம் சொல்லலாம் ..

இப்போராட்டம் வழியாக ஊதியக்குழு மற்றும் ஓய்வூதியம் சார்பாக அரசு முடிவெடுக்க வாய்ப்புகள் குறைவே ..

இவைகளை "காலவரையறையற்ற வேலைநிறுத்தம் " இறுதி  செய்யும் ..

ஆசிரியர் சங்கங்கள் தற்போதாவது ஒற்றுமையாக செயல்படுவது மகிழ்ச்சி என்றாலும் கடந்தகாலங்களில் இடைநிலை ஆசிரியருக்கு மத்திய ஊதியத்தை பெற்று தராத பாவங்களை தீர்க்க  வரும் ஊதியக்குழுவிலாவது சரி செய்ய தொடர்ந்து போராட வேண்டும் ..

பொதுக் கோரிக்கை வெல்லும் நிலையில் ஆசிரியர் அமைப்புகள் ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கையை ஒற்றுமையாக போராடி பெறுவதே சங்க வளர்ச்சிக்கு ஆசிரியர் நலனுக்கு நல்லது ..

ஆக வரும் jacto- jio போராட்டம் புதியதாக கடை திறந்துள்ள அரசிற்கு வைக்கும் தேர்வே ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...