பிராட்பேண்ட் இணைய இணைப்புச் சேவையில் களமிறங்கவுள்ள ஜியோவுக்குப் போட்டி
யாக, ஏர்டெல் நிறுவனம் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த ஆண்டின் இறுதியில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோவால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாஃபோன், ஐடியா, ஏர்செல், பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி 1000 ஜி.பி. வரையிலான இலவச டேட்டா வழங்கும் ரூ.899, ரூ.1,099, ரூ.1,299, ரூ.1,499, ரூ.1,799 மற்றும் ரூ.1599 ஆகிய ஆறு புதிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.899 திட்டத்தில் மாதத்துக்கு 60 ஜி.பி. டேட்டாவுடன் 500 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,099 திட்டத்தில் மாதத்துக்கு 100 ஜி.பி. டேட்டாவுடன் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டாவும், ரூ.1,299 திட்டத்தில் மாதத்துக்கு 130 ஜி.பி. டேட்டாவுடன் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டாவும், ரூ.1,499 திட்டத்தில் மாதத்துக்கு 160 ஜி.பி. டேட்டாவும் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டாவும், ரூ.1,799 திட்டத்தில் மாதத்துக்கு 225 ஜி.பி. டேட்டாவுடன் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் அனைத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
