அதிமுக எம்.எல்.ஏ.
வையாபுரி மணிகண்டன் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில், அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டாக்டர்கள் வையாபுரி மணிகண்டனின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிப்மர் ஆய்வில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,தற்போது அவரது ரத்த மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
