11 ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற்றும் பயனில்லை: தரம் உயர்த்தப்படாத அரசு உயர்நிலைப்பள்ளி

இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாததால்,
மாணவிகளின் மேல் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி 1963ல் துவங்கப்பட்டதாகும். இங்கு இளையான்குடி நகர் மட்டுமின்றி 55 ஊராட்சிகளை சேர்ந்த மாணவிகள் தங்களது படிப்பிற்காக இப்பள்ளியை நம்பியே உள்ளனர். இப்பள்ளி கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. அடிப்படை வசதியின்றியும், பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும், இப்பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி கட்டடத்தில் பல்வேறு இடங்களில், விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில், உள்ளது. பல ஆண்டுகளாகவே, மாணவர்களுக்கு போதுமான கட்டட வசதியும் இல்லை. கழிப்பறை வசதியும் இல்லை. பள்ளியின் பின்புறமும், முன்புறமும், ஆக்கிரமிப்புகளால் இப்பள்ளி சிக்கி தவிக்கிறது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் கூறியதாவது: இளையான்குடியில் உள்ள இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால், இதுவரை இப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல், உள்ளது. எனது மூத்த மகள் இதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காக, மற்ற பள்ளிகளை நாடும்போது, அவர்கள் பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே, எங்களது பள்ளியில் படித்தவர்களை மட்டும் தான், சேர்க்க முடியும், மற்றவர்களை சேர்க்க முடியாது, என்று விரட்டியடித்து விட்டனர். இதே பள்ளியில் பத்தாம் வகுப்பில், அதிக மார்க் எடுத்தும் இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. பணம் கட்ட முடியாமல் பல மாணவிகளின் படிப்பு பாழாய் போன கதையும் உண்டு. எனவே, மாணவிகளின் நலன் கருதி பள்ளியை தரம் உயர்த்தி மற்ற அடிப்படை வசதிகளையும் சரி செய்து தரும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கையாக, வைக்கிறோம், என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...