தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு
இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது.
தமிழக அரசின் துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச் செயலகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி உள்ளிட்ட 41 துறைகளில் காலியாக உள்ள 1,953 இடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கு 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்குக் கடந்த வாரம் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 6) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடந்த இத்தேர்வைத் தமிழகம் முழுவதும் 2,536 மையங்களில் 7,52,916 பேர் எழுதினர். மாநிலம் முழுவதும் 23 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது.
