22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள -ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல் !!

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்

சென்னையில் 5.8.17 அன்று  ஜேக்டோ-ஜியோ சார்பாக   நடைபெற்ற கோரிக்கை பேரணி - ஆர்பாட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அத்துனை நல் உள்ளங்களும், ஏதோ சில காரணங்களால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் -அரசு
ஊழியர்களிடம் 5.8.17 அன்று சென்னையில் நாம் கண்ட நமது ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் எழுச்சியையும் , ஆர்பரிப்புகளையும்  மற்றும்  கோர்க்கையின்
முக்கியத்துவத்தையும் அச்சு ஊடக செய்திகள் வாயிலாகவும் , காட்சி  ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கட் செவி (Whatsapp ) மூலமாகவும்  தெரிந்திருந்தாலும்  .இருப்பினும் அவர்களுக்குரிய நடையில் நீங்கள் எடுத்துக் கூறுங்கள் .
           மேலும் ,மாநில , மண்டல , மாவட்ட , வட்ட நிர்வாகிகள் நம்மை அழைப்பார்கள் என்று எண்ணாமல் , கோரிக்கைகள் நமக்கானது, எனவே கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக  ஜாக்டோ - ஜியோ அறிவிக்கின்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்ற வகையில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ (அ) பள்ளிகளிலோ உள்ளவர்களிடம்  எடுத்துக்கூறி வருகிற 22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொணடார்கள் என்ற புதிய போராட்ட வரலாற்றை படைத்திட  வேண்டுகிறேன் .
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
     
           
          இவண்

 *பெ.இளங்கோவன்  &*

 *ஜெ.கணேசன்*

  *தொடர்பாளர்கள்*  

 *ஜாக்டோ - ஜியோ*  

      *JACTTO - GEO*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...