மத்திய பிரதேசத்தில், அரசு பணிகளில், பெண்களுக்கு, 33
சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்,'' என, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
முக்கியத்துவம்:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று அவர் பேசியதாவது: புதிய இந்தியாவையும், புதிய மத்திய பிரதேசத்தையும் உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
33% ஒதுக்கீடு:
மாநில அரசு நடத்தும், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை, பா.ஜ., செலுத்தும். பெண்களுக்கு, உள்ளாட்சியில், 33 சதவீத ஒதுக்கீடு அளிப்பது மட்டுமின்றி, அரசின் வனத்துறை தவிர, மற்ற அனைத்து துறைகளிலும், 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்