டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்

டெங்கு பாதிப்பு குறித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். 5000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். எந்த காய்ச்சலாக இருந்தாலும் பொதுமக்கள் தாமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...