37 சதவீதத்திற்கும் மேலான இந்திய பள்ளிகளில் மின்சாரம் இல்லை


2017 ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் உள்ள 37 சதவீதத்திற்கும்
அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி திட்ட பல்கலை மற்றும் நிர்வாகம் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி உபேந்திரா அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் 62.81 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. பள்ளிகளில் மின்சார வசதி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஜார்கண்ட் கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 19 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது.

டில்லி, சண்டிகர், தாபர், டாமன், டயூ, லட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் 100 சதவீதம் மின்சார வசதி கொண்டவைகளாக உள்ளன. மிக மோசமான மின்வசதி கொண்ட மாநிலங்களாக அசாம் (25%), மேகாலயா (28.54%), பீகார் (37.78%), மத்திய பிரதேசம் (28.80%), மணிப்பூர் (39.27%), ஒடிசா (33.03%), திரிபுரா (29.77%) ஆகியன உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...