புழக்கத்தில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்!!!


கடந்த வாரம் புதிய 50 ரூபாய் நோட்டுக் கட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில்
கசிந்து வைரலாகப் பரவியது. கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கும் புதிய 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும், புதிய நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்திற்கு விடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) நேற்று (ஆகஸ்ட் 25) அறிமுகப்படுத்தியது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் வந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக ரூ.7.4 லட்சம் கோடி மதிப்பிலான 370 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. நேற்று புதிய 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் பழைய 50 ரூபாய் நோட்டை விட புதிய 50 ரூபாய் நோட்டு சற்றுச் சிறியதாகவும் மெல்லிதாகவும் உள்ளது. வங்கிகளில் மட்டுமே புதிய நோட்டுகளைப் பெற முடியும். ஏ.டி.எம் மூலம் பெற முடியாது. டெல்லி ரிசர்வ் வங்கியிலிருந்து புதிய 50 ரூபாய் நோட்டுகளைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டின் ஒரு புறம் காந்தி படம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புறத்தில் மிகப் பழமை வாய்ந்த விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பி நகரத்து இடிபாடுகளிலிருந்து கண்டறியப்பட்ட விட்டலர் கோவில் கல் ரதம் இடம் பெற்றுள்ளது. இது கர்நாடக அரசின் சுற்றுலாத் துறைச் சின்னமாகவும் இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளது. தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...