தமிழ்நாடு, புதுச்சேரி : 60,000 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 ஆயிரம் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப்
போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே. வேல் தெரிவித்தது:
வழக்குரைஞர் சட்டம் 1961-இல் மத்திய சட்ட ஆணையம் கொண்டுவர உள்ள சட்டத் திருத்தமானது, வழக்குரைஞர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும். இதை மத்திய அரசு ஏற்கக் கூடாது. நீதிபதிகள் பதவிக்கான தேர்வை தேசிய அளவில் நடத்துவது என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் மூத்த வழக்குரைஞர் பெயரையும் பரிசீலனைக்குச் சேர்க்க வேண்டும். வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 60,000 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...