இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி), பிஎச்டி ஆராய்ச்சி
மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.70,000-ஆக உயர்த்தப்படவுள்ளது என்று மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் கேவல் குமார் சர்மா கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள காரக்பூரில், காரக்பூர்-இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 67-ஆவதுற நிறுவன நாள் விழா, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில், கேவல் குமார் பேசியதாவது:
ஐஐடிகளில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தற்போது மாதம் ரூ.25,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
போதிய பண வசதி இல்லாததால், ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்ல நேரிடுகிறது.
தகுதியுள்ள மாணவர்கள், இந்தியாவிலேயே தங்கி ஆராய்ச்சிகளில் ஈடுபடும் வகையில், அவர்களின் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படவுள்ளது.
ஆராய்ச்சி மாணவர்கள் சிலர், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேரும் நிலை ஏற்படுகிறது. அவர்கள், ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தும் வகையில், இந்த உதவித்தொகை உயர்த்தப்படவுள்ளது.
எனவே, உதவித்தொகை உயர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாது. இதுதொடர்பாக, மத்திய அமைச்சரவையிடம் விரைவில் ஒப்புதல் பெறப்படும்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றார் அவர்.