அரசு ஊழியர்கள் போராட்டம் - காற்று வாங்கிய அரசுப் பள்ளிகள் !!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி திருப்பூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மாவட்டத்திலுள்ள 90% அரசுப் பள்ளிகளில் நேற்றைய கல்விப்பணி பாதிக்கப்பட்டது.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முழக்கமிட்டனர்.


 மேலும், மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், மாவட்டம் முழுவதுமுள்ள 1,200-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் இன்று பணியைப் புறக்கணித்தனர். இதனால்,ய் வகுப்புகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.


 பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...