ஆபரேசன் நிச்சயம்: தினகரன் எச்சரிக்கை


சசிகலா ஆலோசனைப்படி ஆபரேசன்
நிச்சயம் நடக்கும் என தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் அவர் அளித்த பேட்டி:

சந்தேகம்:

ஓ.பி.எஸ்., ஐ அமைச்சர்கள் சந்திப்பதில் தவறு இல்லை. தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஒன்று. ஆனால், சிலர் தங்களது பதவியை காப்பாற்ற சுயநலத்தால் இணைப்பு நடந்தாலும், அது நீடிக்குமா என்பது சந்தேகம்.
நான், சசிகலாவின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தேன். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்தால் தான், பல்வேறு தரப்பினர் வைக்கும் புகார்களுக்கு விடை கிடைத்து, சசிகலா குற்றமற்றவர் என்பது வெளிப்படும்.

கவனமாக:

ஜெயலலிதா வீட்டை அரசு இல்லமாக மாற்றுவது தவறில்லை. ஆனால், அது அவசர கதியில் இருக்க கூடாது. சட்ட ரீதியாக அணுக வேண்டும். தொண்டர்களின் பொது மக்களின் கோரிக்கை ஏற்ப இருக்க வேண்டும். இது குறித்து ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா, என தெரியவில்லை. இது அவசரத்தில் சுயநலத்திற்காக செயல்படும் போது சரியாக அமையாது. நினைவிடமாக மாற்றுவது குறித்து அரசு சரியாக அணுக வேண்டும் என கேட்டு கொள்கிறேன். முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

ஸ்லீப்பர் செல்:

சசியிடம் ஆலோசனை பெற்று செல்கிறேன். நிச்சயம் ஆபரேசன் இருக்கும். அதனை நீங்கள் பார்க்கலாம். மேலூர் கூட்டத்திற்கு எம்எல்ஏ வந்தனர். இ.பி.எஸ்., அணியில் சிலர் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர். எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூற முடியாது. தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம். இதனை சசியிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...