ஜி.எஸ்.டி வரியால் அரசுக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?


இந்திய வரலாற்றில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அறிமுகம்செய்யப்பட்டது
. இதன்மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பதுகுறித்த தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் மொத்த வரி செலுத்துபவர்களில் 64.42 சதவிகிதத்தினர் 92,283 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்தியுள்ளனர். ஒட்டு மொத்த வரி செலுத்துவோரும் ஜி.எஸ்.டி செலுத்துவதை கணக்கிட்டால், மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். மத்திய நிதி அமைச்சகம் 91 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதைவிட அதிகமாகவே ஜி.எஸ்.டி மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைத்திருக்கிறது.



 ஜி.எஸ்.டி வரி காரணமாக எளிய மக்கள் தினந்தோறும் உணவு விடுதிகளில் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்குக் கூட 2 ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி காரணமாக பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. அரசுக்கு லாபம் தரும் அதே வேளையில், மக்களை இக்கட்டில் தள்ளியுள்ளது ஜி.எஸ்.டி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...